Welcome to my Unicode encoded Tamil blog. If you have difficulty viewing this page in Tamil, please click here. To learn blogging in Tamil, click here. Also join the group of Tamil bloggers .     - S. Parimelazhagar
தமிழ் யூனிகோடில் அமைந்த என்னுடைய வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. இங்கு காணப்படும் கிறுக்கல்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் மகிழ்ச்சியே. உங்கள் கருத்துக்களை பதிக்கவும் வசதியுண்டு.      - செ.பரிமேலழகர்

இன்னொரு வீடு
Wednesday, January 21, 2004
என்ன மாதிரி நாடோடி(வலையோடி) யாரும் இருக்க முடியாது :-)

மொதல்ல blogspot, அப்புறம் rediff, அப்புறம் இங்கே. இதோ இங்கிருந்தும் ஓட ஆரம்பிச்சாச்சு :-)

புதுசா ஒரு வூடு!

-பரி |நேரம்: 04:08 pm|
செய்திகளில் மரியாதை விளிப்புகள்
Tuesday, January 20, 2004
BBC Report

AP Report

மேலே உள்ள இரண்டு செய்திகளையும் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்கவும்.
படித்துவிட்டீர்களா?

எதாவது வித்தியாசம் தெரிந்ததா? தெரியவில்லையா? தலைப்போடு முடிச்சுப் போட்டுப் பாருங்கள். விளங்கியதா? இல்லையா? ஹும்....நானே சொல்றேன்.

பிபிசி செய்திகளில் பெயர் வரும் எல்லா இடங்களிலும் முன்னால் Mr உட்கார்ந்திருக்கிறது. மரியாதை நிமித்தம் தான். படிக்கும் போது எரிச்சலாக இல்லை?

வெறும் பெயரை மட்டும் எழுதினால் மரியாதையில்லாமல் எழுதுவதாக அர்த்தமா என்ன?

இவர்கள் பரவாயில்லை, தமிழில் "திரு." மரியாதைக்குரிய "அவர்கள்" -முன்னாடியும் மரியாதை பின்னாடியும் மரியாதை கொடுத்து- எழுதுகிறோம்.

அட போங்கப்பா, ஐயா ('அய்யா'-ன்னா அடிய போடுவேன் ஜாக்கிரதை), ஆட்டுக்குட்டி சார், மோர் எல்லாம் போரடிச்சுப் போச்சு.

பேரச்சொல்லிக் கூப்பிடலன்னா அப்புறம் எதுக்கு பேர் வைக்கணும்? மரியாதை மனசுல இருக்கு, எழுத்துல காட்ட 'அவர்'ங்ற பொது விகுதி (ஆண்பால், பெண்பால் இருவருக்கும் பொது) இருக்கு. இதுக்கு மேல என்ன எதிர்பார்க்கறீங்க?

(கலாசார, காரசார காரணத்தக் காட்றவங்க திரும்பிப் பாக்காம ஓடிடுங்க.)

-பரி |நேரம்: 12:35 pm|
தீராத தேடல்கள்
Monday, January 19, 2004
சும்மா கெடைக்கிறத கொற சொல்றதே பொழப்பாப் போச்சு.

எதாவது கிறுக்கலாம்னு வந்தா இது கிறுக்குப் புடிச்ச மாதிரி வம்பு பண்ணிக்கிட்டே இருந்திச்சா, கடுப்புல ரொம்ப நாளா யோசிச்சிக்கிட்டு இருந்தத செயல்படுத்தியாச்சு.

காசிக்குப் போறேன்...அட சை... காசி போன வழியில நானும் போகப் போறேன்னு சொல்ல வந்தேன். இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொரு வூடு மாற வேண்டியிருக்கும்.

-பரி |நேரம்: 03:19 pm|
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
Friday, January 16, 2004
உலகில் எல்லாமே ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டே இருக்கின்றன. கண்ணன் திருடிய வெண்ணைக்கும் பீட்சாவில் கொட்டிக்கிடக்கும் பாலாடைக் கட்டிக்கும் (சீஸ்) சம்பந்தமிருக்கு. சாக்கடைக்கும் சந்தனத்துக்கும் சம்பந்தமிருக்கு. ஒத்த குணமுடைய பொருட்களுக்கிடையே சம்பந்தமிருக்கலாம். சம்பந்தமே இல்லாமத குணமுடைய பொருட்களுக்கிடையேவோ மனிதர்களுக்கிடையேவோ எப்படி சம்பந்தமிருக்க முடியும்.?

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டே......

சே! எனக்கு என்னாச்சு? பித்து பிடிச்சா மாதிரி ஒளறிகிட்டுருக்கேன்? நான் சொல்றது எனக்கே புரியல, கேக்கற உங்களுக்கு எதாவது புரிஞ்சிச்சா? புரிஞ்சுதுன்னா, நான் சொல்லி எனக்கேப் புரியாத ஒண்ணு உங்களுக்குப் புரிஞ்சிதுன்னா அது எப்படி உண்மையான புரிதலாகும்?

சரிதான், எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருச்சி. சம்பந்தா சம்பந்தமில்லாம எதோ பேசிகிட்டு இருக்கேன். நேத்து இப்டித்தான் பாருங்க இணைய நண்பர் ஒருத்தர் மின்மடல் அனுப்பிருந்தார். ஏதோ படிச்சோமா பதில் போட்டோமா இல்ல அப்புறமா பாத்துக்கலாம்னு ஓரமா தூக்கிப் போட்டோமான்னு இருக்கலாம்ல? அது எப்படி முடியும்? அவரோட மின் மடல் முகவரியக் கூடப் பாக்காம எப்படி இருக்க முடியும்? அதுவும் இப்போதான் மொத தடவையா எனக்கு கடுதாசி போடறார், பாக்காம இருக்க முடியுமா?

என்னோட மூளைக்கு நான் சிபிஐ-லயோ எஃப் பி ஐ-லயோ சேர்ந்திருக்கணும். எதையும் தோண்டித் துறுவுற மூளை. அவரோட மின்மடல் முகவரியிலேர்ந்து, அமெரிக்காவுல ஒரு பல்கலைக் கழகத்துல படிக்கவோ பாடம் நடத்தவோ செய்கிறார் என்று படித்த படித்த அறிவு சொல்ல மூளையின் ஒரு செல் (Cell) ஆமாஞ்சாமி போட்டது. பக்கத்து செல் சும்மா இருக்குமா? அது உடனே, அட, இது எங்கியோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கே! கொஞ்சம் பொறுன்னு சொல்லிட்டு, இந்தப் பல்கலைக் கழகத்துல படிச்ச ஒருத்தர கிட்டத்தட்ட மூனு வருஷத்துக்கு முன்னாடி நண்பனுடைய நண்பனாக ஒரே ஒரு தரம் பாத்திருக்கேன்னு சொல்லிச்சி, ஆனா அதுக்கு அவரோட முகம் ஞாபகம் இல்ல.

உருவங்கள ஞாபகம் வச்சிக்கிறதுல கில்லாடியான இன்னொரு செல்கிட்ட 'ஒனக்குத் தெரிஞ்சா சொல்லேன்?'-ன்னது. இந்த செல் கொஞ்சம் கர்வம் புடிச்சது. தனக்கு எல்லாம் தெரியும்கிறத காட்டிக்க, அடுத்தவங்க அறிவ சோதிக்க கொஞ்சம் கொஞ்சமா எடுத்து வுடும். சில சமயங்கள்ல பெரிய மனசு பண்ணி சட்டுன்னு குடுத்துடும். உருவம் எப்போ பதியப்பட்டதுங்கிறதப் பொறுத்தது இது. பதிஞ்சு ரொம்ப நாள் ஆச்சுன்னா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கும்.

ஒரு வழியா கலங்கலா ஒரு மூஞ்சி தெரிஞ்சிச்சி. இது எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருந்த சின்சியர் சிகாமனி செல் 'வெட்டிப் பசங்களா, உருப்படியா எதாவது பண்ணுங்க. இப்போ அந்த ஒரே ஒரு சந்திப்பு ஆசாமிய நெனச்சி உருப்படியா என்ன நடக்கப் போவுது?'-ன்னு ஒரு அதட்டல். எல்லாம் கப்சிப்.

இன்னைக்கு மத்தியானம் சாப்ட போனப்போ ஒரு மூஞ்சி -மூனு வருஷத்துக்கு முன்னாடி பாத்த மூஞ்சி- நேத்து கலங்கலா தெரிஞ்ச மூஞ்சி ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்துச்சி. நேத்து கப்சிப் ஆன செல்லுங்க எங்க வேலை வீண் போகலன்னு சின்சியர் செல்கிட்ட சொல்லிச்சிங்க.

சின்சியர் செல்லுக்கு ஒரே ஆச்சரியம்! எல்லாமே எப்டி ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப் பட்டிருக்குன்னு, 'ஆ'ன்னு வாயப் பொளந்துகிட்டே இருந்திச்சா, பசியில சாப்பாடு உள்ளெ போய்கிட்டே இருந்திச்சி.

-பரி |நேரம்: 02:39 pm|
ரம்பம் பம் ஆரம்பம்
Thursday, January 15, 2004
தைப் பொறந்தா வழி பொறக்கும்னு சொல்வாங்க. விவசாயிங்களுக்கு இந்த வருசம் அது நடக்காது. சோகமான பொங்கல் இது. அதுக்காக சோந்து போயிட முடியுமா? சம்பிரதாயத்துக்காவதுக் கொண்டாடணுமில்லையா?

இந்தத் தைத்திருநாளில் மறுபடியும் வலைப்பதிய ஆரம்பிக்கிறேன், உங்கள் ஆசீர்வாத்ததோடு (ஐஸ் வச்சாச்சு :-) )

அமெரிக்காவின் வட கிழக்கிலும் கனடாவிலும் எலும்பை உருக்கும் குளிர். இங்கெ அவ்வளவா இல்ல, இருந்தாலும் குளிர் குளிர் தானே.

குளிருக்கு இதமா கொறிக்க பொரியரிசி (பொரித்த அரிசி), வறுத்த பயிறு, நொறு நொறு முறுக்குன்னு மரத்தடி அமர்க்களப் பட்டுகிட்டு இருக்கு.

இதெல்லாம் பத்தாதுன்னு நல்லா முறுக்கு சுடுறவங்களுக்கு (வினோபா தூங்கிட்டிருக்கார், அதனால அவர்ட்டேர்ந்து சுட்டாச்சு) பணம் தர்றாங்களாம். நீங்களும் சுட்டுப் போடுங்களேன்!

கதை முறுக்குக்கு: முதல் பரிசு ரூ. 5,000. இரண்டாம் பரிசு ரூ. 2,500
கவிதை முறுக்குக்கும் இதே மாதிரி ரெண்டு பரிசு காத்துக்கிட்டு இருக்கு.

இத நீங்க மரத்தடில அடுப்பு கட்டி, ஒரு கையால கண்ணெ கசக்கிகிட்டு இன்னொரு கையால சுள்ளிய தள்ளி வுட்டுகிட்டுதான் சுட முடியும். அதுவும் ஜனவரி 31 தேதிக்குள்ள சுடணும். அதுக்குள்ளாற மாவு, எள், சீரகம், லோ கொலஸ்ட்ரால் எண்ணை எல்லாத்தையும் எடுத்துகிட்டு வந்து சேருங்க.

நானும் ஒரு முறுக்கு சுடலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். பாக்கலாம்.

-பரி |நேரம்: 12:54 pm|
தற்காலிக நிறுத்தம்
Monday, December 29, 2003
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் பக்கம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து தொடர்ந்து எழுதலாம் என்றால், சூழ்நிலை சரியில்லாமல் போய் விட்டது (ஆண்டிறுதியல்லவா?) இதில் வருத்தம் தான் என்றாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. வலைப்பூவில் பின்னூட்டங்களில். அவ்வப்போது தலை காட்டுகிறேன்.

-பரி |நேரம்: 09:31 am|
தேசிய சிறுவர் தொழில் திட்டம்
Wednesday, December 24, 2003
இது என்ன அநியாயமாக இருக்கிறது? சிறுவர்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கவல்லாவா வேண்டும்? சிறுவர்களுக்கு பள்ளிக்கூடம் அமைக்காமல் தொழில் தொடங்குவதா?

National Child Labour Project (NCLP) - இந்தத் தலைப்பைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? மத்திய அரசாங்கமே சிறுவர்களை வேலைக்குச் செல்ல ஊக்குவிக்கிறது என்றுதானே? அது தான் இல்லை. அடிப்படையில் அது 'தேசிய சிறு தொழிலாளர் ஒழிப்புத் திட்டம்.'

மத்திய அரசில் எந்தக் கனவான் பெயரை வைத்தாரோ தெரியவில்லை National Child Labour Elimination Project என்று இருந்திருக்க வேண்டியது. 'தி ஹிந்து' மிகச் சிரத்தையாக செய்தி வெளியிட்டிருக்கிறது. படித்துப் பாருங்கள்.

இதப்பாத்துட்டு 'ஹமாம் ஒரு நேர்மையான சோப்பு' ஞாபகம் வந்தா நான் பொறுப்பில்லப்பா :-)

-பரி |நேரம்: 07:10 pm|
வார்த்தை தவறிவிட்டாய்
காலை பத்து மணி,
'இதோ ஃபோன வச்சதும் மெயில்ல அனுப்பறேன்'
- நடு நிசி, தூக்கம் தள்ளுகிறது.

'நாளைக்கு லஞ்ச்சுக்குக்
கண்டிப்பா உங்க வீட்டுக்கு வர்றோம்'
ஆறு மணி தொடங்கி பதினோரு மணி வரை
மனையாள் சமையல்கட்டில்.
ஐந்து மணிக்கு ஃபோன், 'வர முடியாத சூழ்நிலை,
மன்னிக்கவும். இன்னொரு நாள்'........

'நாளைக்கி முடிஞ்சிடும் சார்,
ஆயில் மட்டுந்தான் மாத்தணும்'
ஆட்டோ வை அனுப்பிவிட்டு, 'என்னப்பா ரெடியா?'
'ஸாரி சார், நேத்து ஒரு அவசர வேலை'........
- ஆட்டோ வை அனுப்பியிருக்கக் கூடாது.

கையில் முன்பனம், வாயில் புன்னகை,
'கவலைய விடுங்க சார், நாளைக்கி
முழுப்பணத்தையும் கொண்டாங்க
அக்ரீமெண்ட் போட்டுரலாம்'
பணப்பை, பேனா, பேப்பருடன் அழைப்பு மணியையழுத்த
'வேற எடத்துல நல்ல வெலை அமைஞ்சிடிச்சி,
இந்தாங்க உங்க பணம்'
கதவிடுக்கில் வீட்டுக்காரம்மா,
- உள்ளே புன்னகையுடன் அவர்ரொம்ப முத்திடிச்சி :-)

-பரி |நேரம்: 09:37 am|
வீட்டிலிருந்தே பணம் ஈட்டுவதிலிருந்து தப்பிப்பது எப்படி?
Tuesday, December 23, 2003
'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு,' 'இதுக்கு முன்னாடி நாம சந்திச்சிருக்கோமா?'

என்னது இது, ஏதோ இளவட்ட பையன் ஒரு பொண்ண பாத்து சொல்ற வழக்கமான வசனம் மாதிரி இருக்கு? தப்பு. ரொம்பத்தப்பு. இப்போல்லாம் நேரா 'ஐ லவ் யூ' தான்.

சரி, அப்போ இது யார் யார்கிட்ட சொன்னது?

அமெரிக்காவுக்கு வேலைக்கு வந்த புதிதில் அலுவலகத்தில் யாரையுமேத் தெரியாது, ஓரிருவரைத் தவிர. வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனுபவம் புதிதில்லை என்றாலும் இடம், மக்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் எல்லாம் புதிதுதானே! அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது எதிரே வருபவர்களை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் ஒரு சினேகமான புன்னகை, அல்லது ஒரு 'ஹாய்', தெரிந்தவராக இருந்தால் (சில சமயம் இல்லாவிட்டாலும் கூட) 'எப்படி இருக்கிறீர்கள்?' என்ற கேள்வி எல்லாம் மிகச்சாதாரணம். இதையெல்லாம் கவனித்து நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். சொல்ல மறந்துட்டேனே! இதெல்லாம் உள்ளூர்க்காரர்கள் செய்வது.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்தில்தான் இந்தியர்கள் இல்லை? இங்கேயும் இருக்கிறார்கள். இவர்கள் யாரேனும் கண்ணில் பட்டால் வழக்கம் போல ஹாய் ஆரம்பித்தேன். பதிலுக்கு ஒரு ஹாய், ஹலோ? ஊஹூம். சில பேர் செய்வது இன்னும் விசித்திரமாக இருக்கும். அர்ஜுனனுக்கு இலக்கு மட்டுமே தெரிந்தமாதிரி இவர்கள் பார்வை நடக்கும் பாதையில் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். நேர் எதிரே யாரேனும் வந்தால் இவர்கள் பாதை சற்றே விலகும், ஆனால் பார்வை மாறாது. இன்னும் சில பேர் செய்வது அதைவிட விசித்திரம். எதிரே வருவது ஒரு இந்தியர் அவரை இவருக்குத் தெரியாது என்றால் அவரைக் கடக்கும் வரை பார்வை மோட்டுவளையைப் பார்க்கும். இதையெல்லாம் மீறி தப்பித்தவறி நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் இருவர் முகத்திலும் ஒரு சலனமும் இருக்காது.

அடிக்கடிப் பார்க்க நேரும் அலுவலகத்திற்குள்ளேயே இப்படி என்றால் பொது இடங்களில் கேட்கவா வேண்டும்?

மருந்து சாப்பிட்டு வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் கொஞ்சநேரம் வெளியே சென்று வேடிக்கைப் பார்த்து விட்டு வரலாமே என்று கிளம்பினேன். குளிர் காலத்தில் எங்கே வெளியில் நின்று வேடிக்கைப் பார்ப்பது? கிறிஸ்துமஸ் வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும் பல்லங்காடிதான் (mall) சிறந்த இடம். அதென்னவோ இந்தமாதிரி வேடிக்கைப் பார்க்கக் கிளம்பினால் கால்கள் தானாக எலக்ட்ரானிக்ஸ் கடைக்குள் நுழைந்துவிடும்.
அங்கே சலித்துப் போய் வெளியே வந்தால் பக்கத்திலிருக்கும் புத்தகக்கடை. இந்த நாட்டில் புத்தகக் கடையை சிலர், குறிப்பாக மாணவர்கள் ஒரு நூலகமாகவே பயன்படுத்துவர். படிக்க வசதியாக சோஃபா, குடிக்க காஃபிக் கடை என்று இருக்கும். ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்காரலாம் என்று துழாவிக்
கொண்டிருக்கையில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்தக்குரல் கேட்ட கேள்விதான் மேலே உள்ளது.

திரும்பிப்பார்த்தால் வட இந்தியச் சாயலில் என் வயதொத்த ஒருவர். சத்தியமாக இதுவரை நான் அவரைப் பார்த்தது கிடையாது. என்னடா இது நேருக்கு நேர் பார்த்தாலே முறைத்துக் கொண்டு போகும் இந்தியர்கள் மத்தியில் தேடி வந்து, அதுவும் ஒரு பொது இடத்தில் அறிமுகமாக ஆசைப்படுகிறாரே, பாராட்ட வேண்டியதுதான் என்று சத்தியமாக நினைக்கவில்லை, காரணம் அந்தக் கேள்வி/வசனம் ரொம்பப் பரிச்சயமானது.

நாட்டில் இப்படி பல பேர் திரிகிறார்கள். முதலில் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். உங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வார்கள், அதாவது நீங்கள் தேமே என்று பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால். 'நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என்று கேட்டால், ஐடி கன்சல்டிங், அல்லது சொந்த வியாபாரம் என்பார்கள். வீட்டிலிருந்தே கோடி கோடியாக சம்பாதிக்க ஒரு எளிய வழி இருக்கிறது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன், நீங்களும் செய்யலாம் என்பார்கள். 'உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள்' விவரமாக சொல்கிறேன், வீட்டில் வந்து செயல் விளக்கப் படமும் காண்பிக்கிறேன் என்பார்கள். இந்த மாதிரி ஆசாமிகளிடம் தப்பித்தவறி கூட மாட்டிக் கொள்ளக் கூடாது. நானும் அப்படித்தான் செய்தேன். நான் தேடுகிற புத்தகம் கிடைக்கவில்லை, கடை ஊழியரைப் போய் கேட்டுவிட்டு வந்து உங்களைச் சந்திக்கிறேன் என்றுவிட்டு காணாமல் போய்விட்டேன்.

-பரி |நேரம்: 11:50 am|
நோயும் மருந்தும்
Sunday, December 21, 2003
சளி பிடித்தால் குணமாக எத்தனை நாள் ஆகும்? மூன்று நாட்கள்? நான்கு நாட்கள்? மிளகு ரசம், விக்ஸ், வில்லைகள், விஸ்கி(?), பிராந்தி(?) என தற்காலிக நிவாரணிகள் எடுத்துக் கொண்டாலும் முழுவதுமாகக் குணமாவதற்குச் சில காலம் ஆகும். இந்தச் 'சில கால'த்தின் வரையறை என்ன? ஊர்ப்பக்கத்தில் எப்போதோ யாரோ சொல்லிக் கேட்டது.

'மருந்து சாப்டலன்னா கொணமாவறதுக்கு ஏழு நாள் ஆவும், ஆனா மருந்து சாப்டன்னு வச்சிக்க, ஒரே வாரந்தான், பறந்து போயிடும்!'

இது எப்டி இருக்கு?

ஒரு வாரம் முடியறதுக்குள்ள வந்துடறேன் பொறுங்க :-)

-பரி |நேரம்: 12:16 pm|

         Next Page

<< December 2017 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02
03 04 05 06 07 08 09
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
         Next Page
பழைய சோறு
கல்யாணம் - சிறுகதை
தமிழ்ச் செயலிகள்
முரசு அஞ்சல்
இ-கலப்பை
இ-கலப்பை - யூனிகோட் தட்டச்சு செலுத்தி
தமிழ் எழுத்துருக்கள்
தமிழ்ச் செயலிகள்
தமிழ் வலைப்பதிவுலகம்
வலைப்பதிவுகள் பட்டியல்
வலைப்பதிவுகள் கண்ணோட்டம்
<<<<>>>>
பெயரிலி (TSCII)
மதி
காசி
வினோபா
சுபா
செல்வராஜ்
பாலாஜி
பத்ரி
வெங்கட்
கண்ணன்
அரட்டையடிக்கலாம் வாங்க
மரத்தடி
ராயர் காப்பி கிளப்
பதிவர் கூட்டாளிகள்
இதப் படிச்சீங்களா?
திருக்குறள்
மதுரைத்திட்டம்
திசைகள்
காலச்சுவடு
அமுதசுரபி
அகராதி (டிக்ஷனரி)
ஜெயகாந்தன் பக்கம்
திண்ணை
தமிழோவியம்
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
ஒலி 96.8
மெரினா
சக்தி FM
கூத்தடிக்கலாம் வாங்க
தமிழ்ப் பாடல் பக்கம்